Home கலை உலகம் மொட்டை அடிக்கிறார் நானி

மொட்டை அடிக்கிறார் நானி

874
0
SHARE
Ad

naniகோலாலம்பூர், மார்ச்.4- தமிழில் ‘வெப்பம்’, ‘நான் ஈ’ படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி.

இவர் சமுத்திரக்கனி இயக்கும் ‘ஜன்டாபாய் கபிராஜு’ என்ற தெலுங்கு படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‘நிமிர்ந்து நில்’ என்ற பெயரில் தயாராகிறது.

#TamilSchoolmychoice

வாசன் ‘விஷூவல் வெஞ்சர்’ தயாரிக்கும் இப்படத்தில் ஒரு வேடத்துக்காக மொட்டை அடிக்கிறார் நானி.

இதுபற்றி நானி கூறியதாவது:-

எனது தோற்றத்தை மாற்றி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

‘ஜன்டாபாய் கபிராஜு’ படத்தில் 27 வயது இளைஞனாகவும் 48 வயதுகாரராகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன்.

இது எனக்கு சவாலான வேடம். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு மொட்டை அடித்து நடிக்கிறேன். படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கிருஷ்ணவம்சி இயக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.

அதன் படப்பிடிப்பு  முடிந்ததும் மொட்டை அடிக்க இருக்கிறேன். கதாநாயகிகளாக அமலா பால், மேக்னா ராஜ் நடிக்கின்றனர். இவ்வாறு நானி கூறினார்.