Home இந்தியா அமிதாப் பச்சன், அத்வானிக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

அமிதாப் பச்சன், அத்வானிக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

735
0
SHARE
Ad

amitabh-bhachchanபுதுடெல்லி, மார்ச் 30 – டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் எல்.கே.அத்வானி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உட்பட 9 பேருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் பிரான்குமார் சர்மா, சஞ்சய் லீலா பன்சாலி, பிரம்ம தேவ் சர்மா ஆகியோருக்கு பத்மஸ்ரீ  விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் 104 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியாவிற்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.