Home உலகம் தாயின் பாடலுக்கு கைதட்டும் 14 வார சிசு! (காணொளியுடன்)

தாயின் பாடலுக்கு கைதட்டும் 14 வார சிசு! (காணொளியுடன்)

591
0
SHARE
Ad

Untitledலண்டன், மார்ச் 30 – பிரிட்டனில் வசிக்கும் ஜென் கார்டியனல் என்ற பெண்ணின் கருப்பையில் இருக்கும் 14 வார சிசு, அவரின் பாடலுக்கு தகுந்தார் போல் கைதட்டுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

யூ-டியூப் தளத்தில் வெளியாகி உள்ள அந்த காணொளி நாள் தோறும் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகின்றது. ஜென் கார்டியனல் மற்றும் அவரது கணவர் இருவரும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒருமுறை மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தையின் அசைவை காணுகையில், தாயின் பாடலுக்கு குழந்தை கை தட்டுவது தெரிய வந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாக அமைந்தது.

#TamilSchoolmychoice

இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் காணொளியாக செய்தார். குழந்தை கை தட்டும் காட்சிகளை பார்த்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இது குறித்து ஜென் கூறுகையில், “இந்த அனுபவத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது. இது போன்ற செயல் ஆச்சரியமான நிகழ்வு தான்” என்று கூறியுள்ளார்.

கருப்பையில் இருக்கும் சிசு பாடலுக்கு கைதட்டும் காணொளியை கீழே காண்க:-