மார்ச் 31 – காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது.
ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ் எனும் வேதிப்பொருள் மாறுகிறது. இதுதான் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோ அமிலம் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். இது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும்.
எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.