Home இந்தியா அத்வானி மீதான பாபர் மசூதி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

அத்வானி மீதான பாபர் மசூதி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

732
0
SHARE
Ad

Advani,புதுடெல்லி, மார்ச் 31 – பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.

வழக்கில் குற்றம் நிரூபிக்கபடாததால் ரேபரேலி நீதிமன்றம் கைவிட்டது. இதையே அலகாபாத் நீதிமன்றமும் 2010-ல் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடக்கிறது.

நீதிபதிகள் எச்.எல்.டாட்டு, சி.கே. பிரசாத் ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். அத்வானி உள்ளிட்ட 20 பேர் மீதான விசாரணை விரைவில் ஆரம்பமாகும் என உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.டாட்டு, சி.கே. பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice