Home நாடு ‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாக ஆசிரியர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்!

‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாக ஆசிரியர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்!

941
0
SHARE
Ad

he-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர், மார்ச் 31 – ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் மூவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் நேற்று கைது செய்யப்பட்ட நிர்வாக ஆசிரியர் லியோனெல் மோரியாஸ், மலாய் மொழி செய்திப் பிரிவின் தலைமை ஆசிரியர் சுல்கிப்ளி சுலோங் மற்றும் மலாய் மொழி செய்தி ஆசிரியர் அமின் இஸ்கண்டார் ஆகியோர் இன்று மாலை 7 மணியளவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களின் வழக்கறிஞர் ஷியாஹ்ரெட்சன் ஜோஹான் தெரிவித்துள்ளார்.

“தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த காவல்துறை கோரியிருந்த விண்ணப்பத்தை நீதிபதி நஸ்ரி ஓம்ரான் நிராகரித்தார்” என்று ஷியாஹ்ரெட்சன் ஜோஹான் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று காலை டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.