Home நாடு நாடாளுமன்றத்தின் நிறைவு நாள் – ஹாடி அவாங்கின் சட்டத் திருத்தம் சமர்ப்பிக்கப்படலாம்

நாடாளுமன்றத்தின் நிறைவு நாள் – ஹாடி அவாங்கின் சட்டத் திருத்தம் சமர்ப்பிக்கப்படலாம்

867
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள சர்ச்சைக்குரிய ஷாரியா நீதிமன்ற குற்றவியல் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

13-வது பொதுத் தேர்தலின் மூலம் 2013-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசிய நாடாளுமன்றம் இன்றுடன் நிறைவைக் காண்கிறது.

நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இறுதி நாளில் ஹாடி அவாங்கின் ‘355 சட்டத் திருத்த மசோதா’ என்று அழைக்கப்படும் சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரலுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கிளந்தான் மாநிலத்தில் சில கிரிமினர் குற்றங்களுக்கு ஷாரியா முறைப்படியிலான ஹூடுட் நடைமுறையிலான தண்டனையை வழங்கும் சட்டத்தை பாஸ் தலைமையிலான கிளந்தான் சட்டமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.

எனினும் அந்தச் சட்டத் திருத்தம் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அந்தத் திருத்தம் சட்டமாக முடியும்.

இன்று நாடாளுமன்றத்தின் இறுதி நாளில் அந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம், ஒரு பூகம்பத்தை மீண்டும் கிளப்பவும், அதன் மூலம் ஒரு சில பிரிவுகளின் மலாய் வாக்குகளைக் குறி வைக்கவும் தேசிய முன்னணி எண்ணம் கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மஇகா, மசீச, கெராக்கான் மற்றும் சபா, சரவாக்கிலுள்ள பல இனக் கட்சிகள் இந்தச் சட்டத் திருத்தத்தின் மீது வாக்களிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.