Home நாடு ‘அந்நிய அரசியலைக் கொண்டு வராதீர்கள்’ – மலேசியர்களுக்கு சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை!

‘அந்நிய அரசியலைக் கொண்டு வராதீர்கள்’ – மலேசியர்களுக்கு சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை!

886
0
SHARE
Ad

சிங்கப்பூர் – மலேசியப் பொதுத்தேர்தல் தொடர்பான எந்த ஒரு விருப்பு, வெறுப்புகளையும், சிங்கப்பூரில் வாழும் மலேசியர்கள் காட்ட வேண்டாம் என சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும், அந்நிய அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டு வர வேண்டாம் என அனைத்துலக பெர்சே உள்ளிட்ட அமைப்புகளை வலியுறுத்தியிருக்கிறது.

“சிங்கப்பூருக்கு வருகை புரியும், வேலை செய்யும் அல்லது வாழும் வெளிநாட்டினர், தங்களின் அரசியல் விருப்பு, வெறுப்புகளைக் காட்ட சிங்கப்பூரை ஒரு தளமாகப் பயன்படுத்தக் கூடாது” என சிங்கப்பூர் காவல்துறை நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர் சிங்கப்பூரின் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும், சிங்கப்பூரர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த அனுமதி கிடையாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

சட்டத்தை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சிங்கப்பூர் விசாவோ அல்லது வேலை அனுமதியோ இரத்து செய்யப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.