Home கலை உலகம் ‘கொம்பன்’ படத்தை தடை செய்யக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

‘கொம்பன்’ படத்தை தடை செய்யக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

1025
0
SHARE
Ad

kombanசென்னை, ஏப்ரல் 1 – கொம்பன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி புதிய தமிழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கார்த்தி நடித்து, முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ திரைப்படத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய கலவரமான முதுகளத்தூர் கலவரத்தையும்,

அப்போதிருந்த ஜாதி பிரச்னைகளையும் ஒரு சார்பாக விமர்சிப்பதாகவும், வரலாற்றை மாற்றுவதாகவும் கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னையில் சில அமைப்புகள் இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளன.

komban02சமீப காலமாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான படுகொலைகள் அதிகளவில் நடந்து வரும் சூழ்நிலையில் இத்திரைப்படத்தால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் தெரிவித்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லாததால், நேற்று இதுகுறித்து அவசர வழக்கு ஒன்றை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுத்தார்.

komban01இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பத்து பேர் கொண்ட குழு, ‘கொம்பன்’ திரைப்படத்தை பார்த்து அறிக்கை தர உத்தரவிட்டனர். இதற்கிடையே, இப்படத்தில் ஜாதி ரீதியான எந்த வசனமோ, காட்சிகளோ இல்லை என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொம்பன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று ஆர்பாட்டம் நடத்தினர். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இப்படத்தில் இரண்டு சமுதாயத்தினரை பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

komban03பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதில், புதிய தமிழகம் மாவட்ட நிரவாகிகள் இரும்பொறை சேதுராமன், பாஸ்கர், சிற்றரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். எனினும் ‘கொம்பன்’ படம் நாளை உலகமுழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.