கொழும்பு, ஏப்ரல் 1 – திபெத்தின் பௌத்த தலைவரான தலாய்லாமாவுக்கு இலங்கைக்கு செல்வதற்கான விசாவை இலங்கை அரசாங்கம் வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கைக்கு வருமாறு கொழும்பிலுள்ள மஹாபோதி சங்கம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அவருக்கு இலங்கை வருவதற்கான விசா வழங்கப்பட்டால் சீனா மற்றும் இலங்கைக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற காரணத்தினாலே அரசாங்கம் இத்தகைய தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.