Home நாடு பெர்மாத்தாங் பாவ்: தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-இல் முடிவு!

பெர்மாத்தாங் பாவ்: தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-இல் முடிவு!

576
0
SHARE
Ad

The Election Commission (EC)கோலாலம்பூர், ஏப்ரல் 1 – அன்வார் இப்ராகிமின் அரச மன்னிப்பு மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ அப்துல் கனி சாலே, இதனை அறிவித்தார்.

ஏப்ரல் 8ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் முகமன் யூசோப் தலைமை தாங்குவார். அதன் பின்னர் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதில் அம்னோவும், தேசிய முன்னணியும் முனைப்புடன் இறங்கியுள்ளன.

பினாங்கு தேசிய முன்னணித் தலைவர்களை துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் கோலாலம்பூரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்துள்ளதாக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அன்வாரின் வழக்கறிஞர் அமர்ஜித் சிங் அரச மன்னிப்பு வாரியம் அன்வாரின் மேல் முறையீட்டை நிராகரித்ததாக அறிவித்திருந்தார்.