திருமணத்தை முன்னிட்டு நடைபெறும் இதர சடங்குகள் டெல்லியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றன. உலகக் கோப்பைத் தொடரின் பாதியில் ரெய்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் நாடு திரும்பியதும் திருமண வேலைகள் வேகமாக நடந்தன. திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் முடிந்த சில நாள்களில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார். பிரியங்கா செளத்ரி தற்போது நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். ரெய்னாவும், பிரியங்காவும் சிறு வயது முதலே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.