Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு- கருணாநிதி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு- கருணாநிதி

746
0
SHARE
Ad

dmkசென்னை, மார்ச்.4- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மணி விழா மலரை வெளியிட்ட கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், இலங்கை பிரச்னையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசிபெருமாள் 33 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றார்.

முன்னதாக ஸ்டாலின் மணி விழாவையொட்டி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.கவினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். மணிவிழாவையொட்டி, மேடை அருகில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

அதில், தொண்டர்கள் தேர்தல் நிதியாக பணத்தை செலுத்தி விட்டு சென்றனர். உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்தது. ஸ்டாலினுக்கு பூங்கொத்துகள், மாலைகள், சால்வைகள், பழத்தட்டுகள், ரூபாய் நோட்டு மாலைகள், போன்ற பரிசு பொருட்களை திமுகவினர் வழங்கினர்.