Home உலகம் சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டம்!

சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டம்!

397
0
SHARE
Ad

chinaபெய்ஜிங், ஏப்ரல் 3 – சீனாவிடம் இருந்து 4 முதல் 5 பில்லியன் செலவில் எட்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் நிறைவேறினால் அன்னிய நாடுகளுக்கு சீனா செய்யும் மிகப்பெரும் ஆயுத விற்பனையாக இது அமையும். பாகிஸ்தானின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் கொள்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது தொடர்பாக சீனாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே பாதுகாப்பு துறையில் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.