Home கலை உலகம் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தடை!

மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தடை!

558
0
SHARE
Ad

okkmசென்னை, ஏப்ரல் 6 – ஒரு பெரிய படம் வருகிறது என்றால், அதனுடன் கூடவே பல பிரச்சனைகளும் வந்து விடுகின்றன. சமீபத்தில் ‘கொம்பன்’ படம் கூட மிகுந்த சிரமத்தை கடந்து தான் திரையரங்கிற்கு வந்தது.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படம் திரைக்கு வரவிருந்தது. ஆனால், மணிரத்னத்தின் முந்தைய படமான கடல் தோல்வியடைந்ததை காரணம் காட்டி அந்த படத்தில் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால் தான், இந்த படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.

இதற்காக நாளை (ஏப்ரல் 7) அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 8) ஆகிய தேதிகளில் அவர்கள் புகார் அளிக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், திட்டமிட்டப்படி ‘ஓ காதல் கண்மணி’ படம் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  என படக்குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice