Home வாழ் நலம் சிறுநீரக கற்களை வெளியேற்றி, மன அழுத்தத்தை குறைக்கும் செவ்வாழை!

சிறுநீரக கற்களை வெளியேற்றி, மன அழுத்தத்தை குறைக்கும் செவ்வாழை!

944
0
SHARE
Ad

ht171-756x290ஏப்ரல் 6 -வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அதில் விலை மலிவாக கிடைக்கக்கூடியது தான் மஞ்சள் நிற வாழைப்பழங்கள். எனவே பலரும் மஞ்சள் நிற வாழைப்பழங்களைத் தான் வாங்கி சாப்பிடுவோம்.

ஆனால் மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட, செவ்வாழை மிகவும் ஆரோக்கியமானது. மேலும் செவ்வாழையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல் செவ்வாழையின் விலை அதிகம்.

இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆகவே செவ்வாழை விலை அதிகம் இருந்தால், அவ்வப்போது அதனை வாங்கி சாப்பிடுங்கள். இங்கு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்போம்.

#TamilSchoolmychoice

மலச்சிக்கலை போக்கும்:

மலச்சிக்கலால் அவதிப்பட்டால், செவ்வாழை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாய்வு தொல்லை போன்றவைகள் வராமல் தடுக்கலாம்.

சிறுநீரக கற்களை தடுக்கும்:

செவ்வாழையில், உடலின் செயல்பாட்டிற்கு தேவையான பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் தான் சிறுநுரீக கற்கள் உருவாவதைத் தடுத்து சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது.

செவ்வாழைஎலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்:

செவ்வாழை எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும். அதனால் தான் குழந்தைகள், வயதானவர்கள் செவ்வாழை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

அதிலும் குழந்தைகளுக்கு தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

உடல் எடையைக் குறைக்கும்:

மற்ற பழங்களை விட செவ்வாழையில் கலோரிகள் குறைவு. ஆகவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிறு விரைவில் நிறைந்துவிடும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுன் இருக்கும். மேலும் இதனை உட்கொண்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

-Red_banana-நெஞ்செரிச்சலை குணப்படுத்தும்:

செவ்வாழையில் ஆன்டாசிட் எனும் அமில தன்மை உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் இதனை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்:

செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் நீங்கும். ஆயுவ் ஒன்றில் தினமும் இரண்டு செவ்வாழையை உட்கொண்டு வந்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, நேர்மறையான எண்ணத்தை அதிகரித்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும் என்று தெரிய வந்துள்ளது.