Home நாடு செமினி விபத்து: “ஹெலிகாப்டரில் ஐஜிபி கார்ப் ராபர்ட் தான் பயணம் செய்யவில்லை” – டொனால்ட் லிம்...

செமினி விபத்து: “ஹெலிகாப்டரில் ஐஜிபி கார்ப் ராபர்ட் தான் பயணம் செய்யவில்லை” – டொனால்ட் லிம் தகவல்

516
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – செமினியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த அறுவரில் ஐஜிபி கார்ப் பெர்ஹாட் நிறுவனர் டத்தோஸ்ரீ ராபர்ட் தான் சங் மெங்கும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதை மசீச தேசிய உதவித் தலைவர் டத்தோ டொனால்ட் லிம் சியாங் சாய் (படம்) மறுத்துள்ளார்.

donaldlim400px

தானின் நெருங்கிய நண்பரான டொனால்ட் லிம் நேற்று இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “அந்த ஹெலிகாப்டரில் ராபர்ட் தான் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். சனிக்கிழமை அவருடன் தொலைப்பேசி வழியாகப் பேசினேன். தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் உள்ளார்” என்று பெர்னாமாவிடம் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

விபத்து நடந்த அன்று, முதற்கட்ட தகவல்களில் ஐஜிபி கார்ப் பெர்ஹாட் நிறுவனர் டத்தோஸ்ரீ ராபர்ட் தான் சங் மெங் தான் அதில் பயணம் செய்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் மாறாக, கெடாவைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ ராபர்ட் தான் ஹூவாட் சியாங் தான் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.

அவர் எஸ்பி பைடூரி செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.பெயர் குழப்பதினால் முதலில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், விரைவில் ஐஜிபி கார்ப் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும், ஐஜிபி கார்ப் பெர்ஹாட் நிறுவனர் டத்தோஸ்ரீ ராபர்ட் தான் உயிருடன் நலமாக உள்ளார் என்றும் டத்தோ டொனால்ட் லிம் தெரிவித்துள்ளார்.