Home நாடு செமினி விபத்து: பயணிகள் ‘அமைதியானது’ ஏன்? – கறுப்புப் பெட்டி ஆய்வில் புதிய சந்தேகம்!

செமினி விபத்து: பயணிகள் ‘அமைதியானது’ ஏன்? – கறுப்புப் பெட்டி ஆய்வில் புதிய சந்தேகம்!

675
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியான செமினி ஹெலிகாப்டர் விபத்தில், இன்னும் மர்மம் நீடித்து வருகின்றது.

Helicopter crash

கண்டெடுக்கப்பட்ட கறுப்புப் பெட்டியின் குரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் சில நிமிடங்களுக்கு முன் பயணிகள் அனைவரும் எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும், அது விழுந்து நொறுங்குவதற்கு முன் பல விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டென எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாகியுள்ளனர். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருவேளை அவர்கள் களைப்பில் உறங்கியிருக்கலாம்” என்று நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக ‘தி நியூ ஸ்டெரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், அந்த ஹெலிகாப்டரை விமானி கிளிஃப் ஃபோர்னியர் மட்டுமின்றி கிர்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணான அய்டானாவும் இயக்கியிருக்கக் கூடும் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

செமினி பகுதியின் மேல் 2000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், திடீரென கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் போது வெடித்துள்ளது என்பது தான் தற்போது விசாரணை அதிகாரிகளின் முடிவு.

காரணம் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதியில் அது வெடித்துச் சிதறியதற்கான எரிந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.