Home இந்தியா மோடியின் விமானம் பழுது: மாற்று விமானத்தில் ஜெர்மனி சென்றார் மோடி!

மோடியின் விமானம் பழுது: மாற்று விமானத்தில் ஜெர்மனி சென்றார் மோடி!

815
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி, ஏப்ரல் 15 – 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி கடந்த 9-ஆம் தேதி தொடங்கினார். ஏர் இந்தியாவின் போயிங் 747-400 ரக விமானத்தில் அவரது குழுவினரும் பயணம் செய்தனர்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய குழுவினர் ஜெர்மனி சென்றுள்ளனர்.  இந்நிலையில் பெர்லின் நகரில், பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தின் இன்ஜினில் பழுது ஏற்பட்டது.

Narendra_Modi-680x365வழக்கமாக பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது, அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டால் மாற்று விமானம் தயார் நிலையில் வைத்திருக்கப்படும்.

#TamilSchoolmychoice

அதுபோல் மும்பையில் தயார் நிலையில் இருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று பெர்லினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த விமானத்தில், பிரதமர் மோடி தனது கனடா பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வார்.