Home நாடு செமினி ஹெலிகாப்டர் விபத்து: வால் பகுதியில் ஏற்பட்ட சேதம் தான் காரணம்!

செமினி ஹெலிகாப்டர் விபத்து: வால் பகுதியில் ஏற்பட்ட சேதம் தான் காரணம்!

597
0
SHARE
Ad

Liow-Tiong-Laiபுத்ராஜெயா, மே 14 – கடந்த மாதம் செமினியில் முக்கியப் பிரமுகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அதன் வால் பகுதியின் இடது பக்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இருக்கலாம் என மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார்.

விபத்து குறித்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை இன்று வெளியிட்ட லியாவ் தியாங் லாய், அதில் கூறியிருப்பதாவது:-

“ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக முவாட்ஸாம் ஷாவிலுள்ள பள்ளி ஒன்றின் மைதானத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது அதன் இடது புறத்தின் தரையிறங்கும் கியர் (Landing gear) நிலத்தில் பட்டு சுமார் 20 அங்குலத்திற்கு குழியாகியுள்ளது.”

#TamilSchoolmychoice

“ஹெலிகாப்டரின் வால்பகுதியில் இடது புறத்தில் இருந்த கிடைமட்ட நிலநிறுத்தியில் (horizontal stabiliser) ஏற்பட்ட செயலிழப்பு தான் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது 13 டிகிரி அளவில் இடது புறமாக சாய்ந்துள்ளது.ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் பயணியை இறக்கிவிட்டவுடன் சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு நின்றுள்ளது.”

“எனவே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது இந்த கருவி (stabiliser) கீழே விழுந்திருக்கலாம். இதன் காரணமாக தான் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளதாக சந்தேகப்படுகின்றோம்”

“கிராமவாசிகள் யாராவது அந்த கருவியை கண்டெடுத்தால் உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கருவி இந்த விசாரணைக்கு மிகவும் முக்கியம்” இவ்வாறு லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கடந்த ஏப்ரல் 4-ம் தேதி செமினி பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்சிஸ், பிரதமரின் மூத்த தனிச்செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்லின் அலியாஸ் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

iera.