Home நாடு “ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்து – ஊகங்கள் வேண்டாம்” -லியோவ் வேண்டுகோள்

“ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்து – ஊகங்கள் வேண்டாம்” -லியோவ் வேண்டுகோள்

729
0
SHARE
Ad

நீலாய், ஏப்ரல் 19 – ஜமாலுடின் ஜார்ஜிஸ் உயிரைப் பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியாகும் யூகச் செய்திகளை ஊடகங்கள் நம்பக்கூடாது என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Liow-Tiong-Lai-Sliderடான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் உள்ளிட்ட 6 பேரை பலிவாங்கிய அந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விமானத்தின் ஒலிப்பதிவு மற்றும் தரவு பதிவு சாதனங்களை விசாரணைக் குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும் லியோவ் தெரிவித்தார்.

“இன்னும் 2 வாரங்களில் விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியாகும். சில தரப்பினர் கூறும் தவறான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன. விமானிகள் அறையில் உள்ள ஒலிப்பதிவு மற்றும் விமான தரவு பதிவு சாதனங்களில் உள்ள தகவல்களை விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். அவை இங்கிலாந்தில் இருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து முடிவுக்கு வரும் முன்னர் அத்தகவல்களை முழுமையாக அலசி ஆராய வேண்டியுள்ளது,” என்றார் லியோவ்.

#TamilSchoolmychoice

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் அதிலிருந்த பயணிகள் சில விநாடிகள் அமைதியாக இருந்ததாக ஒரு நாளேட்டில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர்,  இதுபோன்ற தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க இயலாது என்றார்.

“இது முக்கியமான ஒரு விவகாரம். எனவே ஒரு செய்தியை வெளியிடும் முன்னர் அதற்குரிய வலுவான ஆதாரம் இருப்பது அவசியம். எங்களது பணியைச் செய்ய அனுமதியுங்கள். அதுவரை தயவு செய்து காத்திருங்கள். விசாரணை முடிவுக்கு வந்ததும், அனைத்து தகவல்களும் வெளியிடப்படும்,” என்று லியோவ் மேலும் தெரிவித்தார்.