Home இந்தியா ஐபிஎல்: ராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

813
0
SHARE
Ad

Rajasthan-Royals-Logoஅகமதாபாத், ஏப்ரல் 19 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரிசையாக வெற்றிகளையே பதிவு செய்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலம் பொருந்திய ராஜஸ்தான் ராயல் அணியிடம் மண்ணைக் கவ்வியது.

முதல் பாதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களை முடித்தபோது 4 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதியில், ராஜஸ்தான் அணி அதிரடியாக விக்கெட் எதனையும் இழக்காமல் 140 ஓட்டங்கள் வரை எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும் அஜிங்கியா இருவரும் இணைந்து 140 ஓட்டங்கள் வரை எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் அதிரடியாக பந்துகளை விளாசித் தள்ளினர்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், 157 ஓட்டங்கள் எடுத்து  இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Chennai Super Kings Logo with Dhoni