Home நடந்த நிகழ்ச்சிகள் கேவியஸ் தலைமையில் திலா லக்‌ஷ்மணின் ‘ஜனனம்’ துவங்கியது!

கேவியஸ் தலைமையில் திலா லக்‌ஷ்மணின் ‘ஜனனம்’ துவங்கியது!

758
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 19 – பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ கேவியஸ் தலைமையில், மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி திலா லக்‌ஷ்மண் ஏற்பாட்டில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தனிப்பாடலான ‘ஜனனம்’ அறிமுக விழா இன்று இரவு 8.13 மணியளவில் தலைநகர் டிபிகேல் அரங்கத்தில் துவங்கியது.

2109-1

இவ்விழாவில், மலேசியாவின் பல்வேறு அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மலேசியக் கலைஞர்கள், அஸ்ட்ரோ, டிஎச்ஆர், மின்னல் எப்எம் உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் பிரித்திவிராஜ் கலந்து கொண்டார்.

முதல் அங்கமாக, மறைந்த மலேசிய நடிகை ஹனி சிவ்ராஜூக்கு 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.