Home நாடு செமினி: ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் முழுவதும் அகற்றம்!

செமினி: ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் முழுவதும் அகற்றம்!

602
0
SHARE
Ad

செமினி, ஏப்ரல் 8 – செமினியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குப் பின் 3 நாட்களுக்கும் மேலாக விபத்து பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், தற்போது அனைத்து பாகங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார்.

Helicopter crash

#TamilSchoolmychoice

(விபத்து பகுதியிலிருந்து சடலங்களை மீட்கும் மீட்புப்படையினர்)

ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் சுங்கை பெசியில் உள்ள அரச மலேசிய காவல்துறையின் வான் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

“ஹெலிகாப்டரின் சிறிய பாகங்களை சுமந்து கொண்டு 3 லாரிகள் கடைசியாக வந்து சேர்ந்தன. இரண்டாவது இன்ஜின் மற்றும் கியர் பெட்டி ஆகியவை காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை மதியம் மீட்கப்பட்டன. அனைத்து சிதைந்த பாகங்களும் மீட்கப்பட்டு விட்டாலும் கூட விபத்து பகுதி காவல்துறை கட்டுப்பாட்டிலேயே அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இருக்கும்.

“புதன்கிழமை போலிசார் மற்றும் ஆயுதப் படையினர் விபத்து பகுதியில் மீண்டும் கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஏதேனும் சிறிய சிதைந்த பாகங்கள் உள்ளனவா என ஆராய்வர். ஹெலிகாப்டரின் ஏதேனும் பாகம் இல்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை தொடங்குவோம். எங்களுக்கு திருப்தி ஏற்படும் வரை இந்நடவடிக்கை தொடரும்,” என்றார் லியோவ்.

இத்தகைய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் அது குறித்து போக்குவரத்து அமைச்சு அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.