Home நாடு “ஆம்…எனது ஆட்சியில் பண இழப்பு ஏற்பட்டது” – மகாதீர் ஒப்புதல்

“ஆம்…எனது ஆட்சியில் பண இழப்பு ஏற்பட்டது” – மகாதீர் ஒப்புதல்

509
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – தாம் பிரதமராக பதவி வகித்த போது நாட்டுக்கு பண இழப்பு ஏற்பட்டதாக துன் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Mahathir

எனினும் நாட்டு மக்களுக்கும் இந்த உலகிற்கும் அந்த பண இழப்பு எப்படி ஏற்பட்டது என்பது நன்கு தெரியும் என்று தமது இணையதளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது ஆட்சிக் காலத்தில் பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டது என்பது இந்த நாட்டிற்கு தெரியும். ஒரு தொழிலில் லாபமும் இருக்கும், சில சமயங்களில் நஷ்டங்களும் ஏற்படும். ஆனால் பணம் காணாமல் போவதை மட்டும் ஏற்கவே இயலாது,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1981 முதல் 2002 வரை பிரதமராக பதவி வகித்தார் மகாதீர். இந்நிலையில், அண்மையில் ரிங்கிட்டின் மதிப்பு எழுபது காசு வரை குறைந்து நாட்டுக்கு பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1 எம்டிபி நிறுவனத்துக்கு சுமார் 42 பில்லியன் ரிங்கிட் அளவிற்கு கடன் சுமை ஏற்பட்டதற்கான தகுந்த காரணங்கள் ஏதுமில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

“நான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது குற்றம்சாட்டவில்லை. பில்லியன் கணக்கில் ஏற்பட்டுள்ள கடன் சுமை குறித்தே கேள்விகள் எழுப்புகிறேன். ஏனெனில் இந்த கடனை சுமக்கப் போவது மக்கள்தான்.”

“ஆனால் என்னை குறை கூறுபவர்களும் நானும் இப்படித்தான் செயல்பட்டேன் என்போரும் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. நான் பதவி விலகியதும் அரசாங்க பணத்தை நான் சுருட்டியதாக கருதி அதற்கான ஆதாரங்களை சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. என்னை அவர்கள் மீண்டும் விசாரிக்க விரும்பினால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார் மகாதீர்.