Home நாடு பாஸ் தேர்தல்: ஹாடியை எதிர்த்து அஹமட் அவாங் போட்டி!

பாஸ் தேர்தல்: ஹாடியை எதிர்த்து அஹமட் அவாங் போட்டி!

491
0
SHARE
Ad

ahmd

கோலாலம்பூர், மே 14 – எதிர்வரும் பாஸ் கட்சித் தேர்தலில், நடப்புத் தலைவர் ஹாடி அவாங்கை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் அஹமட் அவாங் களமிறங்குகிறார்.

கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் தான் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக அஹமட் அவாங் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அஹமட் அவாங் பாஸ் கட்சித் தலைமைகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுயிருப்பதாவது:-

“இது ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் ஒரு கட்சி. அதேநேரத்தில் கட்சியை நாம் வலுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியில் தனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்ததாகவும் அஹமட் அவாங் தெரிவித்துள்ளார்.

“தேசிய அளவிலான அரசியலில் பாஸ் கட்சி முக்கியப் பங்காற்றுகின்றது. அதனால் தான் நான் இந்த போட்டியை ஏற்றுக்கொண்டேன். நான் எனது ஆதரவாளர்களை அதிருப்தியடைய செய்யமாட்டேன்” என்றும் அஹமட் அவாங் தெரிவித்துள்ளார்.