Home உலகம் சவுதியில் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கபடுகிறது!

சவுதியில் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கபடுகிறது!

658
0
SHARE
Ad

images_KigdomTower 03துபாய், மே 14 – சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில்  சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது.

கிங்டம் டவர் என்றழைக்கப்படும் இக்கட்டிடமானது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 1,007 மீட்டர்  உயரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடம், குறைந்தது 167 மாடியிலிருந்து  200 மாடிகள் வரை கட்டப்பட உள்ளது.

இதில் 121 சேவை வசதிகளுடன் கூடிய அறைகள், 360  குடியிருப்புவாசிகளுக்கான அறைகள், 200 அறைகள் கொண்ட 4 தங்கும் விடுதிகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட  உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கட்டிட பணிக்கு சுமார் 1.23 பில்லியன் டாலர்கள் செலவாகும்  என்று திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கடல் பகுதியில்   2013-ல் தொடங்கப்பட்ட இக்கட்டிட பணிகள் 2018-ல் நிறைவடைய உள்ளது.

இங்கு அமைய உள்ள விடுதிகளின் விற்பனை இவ்வருடம் துவங்க  உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் இக்கட்டிடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கட்டிட பணிகள் நிறைவு பெற்றால் 828 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு உலக சாதனையாக கருதப்படும் துபாய் புர்ஜ் கலிபா கட்டித்தை விட  இக்கட்டிடமே உலகின் உயரமான கட்டிடமாக திகழும் என இக்கட்டிடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.