Home படிக்க வேண்டும் 2 ரூ.1000 கோடி செலவில் ஐதராபாத்தில் அமைகிறது கூகுள் வளாகம்!

ரூ.1000 கோடி செலவில் ஐதராபாத்தில் அமைகிறது கூகுள் வளாகம்!

338
0
SHARE
Ad

Google-to-Introduce-Offline-Shop-for-Peopleஐதராபாத், மே 14 – கூகுள் நிறுவனம், ஐதராபாத் நகரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது வளாகத்தை அமைக்கிறது என தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: “கூகுள் நிறுவனம் ஆசியாவிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தனது வளாகத்தை அமைக்க உள்ளது”.

“இதற்காக, ஐதராபாத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப வழித்தட பகுதியான, கச்சிபெளலியில் 7.2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தெலுங்கானா அரசு மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவற்றிடையே கையொப்பமாகியுள்ளது”.

#TamilSchoolmychoice

“இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை, அடுத்த நான்கு ஆண்டுகளில், தற்போதைய 6,500-லிருந்து, 13 ஆயிரமாக அதிகரிக்கும்”.

“கூகுள் நிறுவனம், முதன்முறையாக, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் ஐதராபாத் நகரில் இந்த வளாகத்தை அமைக்கிறது. இந்த வளாகம், வரும் 2019-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.