Home உலகம் சீனா சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு!

சீனா சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு!

394
0
SHARE
Ad

modi-in-china-ani-twitterசீனா, மே 14 – சீனாவுக்கு முன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபரின் சொந்த மாநிலமான ஷான்சியில் உள்ள சிகான் சென்றடைந்தார்.

ஷான்சி மாநில ஆளுநர் லோ ஜிங் ஜியாங் மற்றும் உயர் அதிகாரிகள் மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

modiji-650_051415064810அப்போது மோடியை வரவேற்கும் வகையில் ஏராளமான சிறுவர்கள் சீன பாரம்பரிய முறைப்படி நடனமாடி மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

#TamilSchoolmychoice

ஷியானில் இன்று பிற்பகலில் சீன அதிபர் ஜீ ஜிங்சிங்கை மோடி சந்தித்து பேசவுள்ளார். இதனை தொடர்ந்து அங்குள்ள பழமையான புகழ் மிக்க புத்த ஆலயத்திற்கு செல்லும் அவர், நாளை தலைநகர் பேய்ஜிங் செல்கிறார்.

Modi arrives in Xi'an,அங்கு சீன பிரதமர் மற்றும் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம், எல்லை பிரச்சனை குறித்து சீன தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.