புதுடெல்லி,மே 23 – இந்தியப் பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாகச் சீனா, மங்கோலியா, தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது நாம் அறிந்ததே!
இந்நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது அவர், இந்தியர்களின் மனம் புண்படும் வகையில் பேசியதாக அவர் மீது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பியூஷ் பன்சாலி என்பவர் கான்பூர் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் பிரதமர் மோடி பேசியபோது,கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் பிறந்ததற்காக இந்தியக் குடிமகன்கள் வெட்கப்பட்டதாகப் பேசியதாகவும்,இத்தகைய பேச்சு இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
.