Home இந்தியா ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!  

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!  

538
0
SHARE
Ad

jaya-rosaiaha-600-290x195சென்னை,மே23 – மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில்  செல்வி ஜெயலலிதா மீண்டும்  தமிழக முதலமைச்சராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

கடற்கரைச் சாலை முழுவதும் அதிமுக தொண்டர்கள் திரளாகக் கூடி நின்று ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் மட்டுமின்றி பல முக்கியப் பிரமுகர்களும் ஆர்வத்தோடு வந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டது ஆச்சரியமான செய்தியாகும்.

அதுமட்டுமில்லாமல்,இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டதும் சிறப்புச் செய்தியாகும்.

மேலும்,பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்,இல.கணேசன்,எச்.ராஜா போன்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்,திரைப்பட நடிகர்கள் சரத்குமார்,பிரபு,தியாகு,மனோபாலா,செய்திவாசிப்பாளர்கள் பாத்திமா பாபு,நிர்மலா பெரியசாமி,நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா,குயிலி,மதுரை ஆதீனம் முதலானோரும் கலந்து கொண்டனர்.

rajinikanth with sarathkumar