Home உலகம் இலங்கையில் ஒற்றுமை ஓங்க வேண்டும் – அதிபர் சிறிசேனா!

இலங்கையில் ஒற்றுமை ஓங்க வேண்டும் – அதிபர் சிறிசேனா!

737
0
SHARE
Ad

sirisena01கொழும்பு, ஏப்ரல் 15 – சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மைதிரிபால சிறிசேனா, இலங்கை மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைத்து மத, கலாசார மற்றும் சமுதாய மக்களுக்குமான மதிப்புகளை போற்றவதே அரசின் தலையாயக் கடமை”.

“இந்த புத்தாண்டு மக்களுக்கு இடையே ஒற்றுமையை உறுதிசெய்யவும், சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக விளங்கவும் வேண்டுகிறேன்”.

#TamilSchoolmychoice

“இந்த நேரத்தில் இன, மத பேதமின்றி நாம் அனைவரும் இலங்கை மக்கள் என்ற மன நிலையோடு மட்டும் ஒற்றுமை, அமைதி, நல்லெண்ணம், பகிர்தல் போன்ற உணர்வோடு பொதுப்படையுடன் வாழ்ந்து நலம் சேர்க்க வேண்டும். ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமையடைந்ததே நமது வரலாறு”.

“அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டியது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். புத்தாண்டில் வேற்றுமையின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து நாட்டில் செழிப்பு நிறைந்திட வழி ஏற்படுத்த வேண்டும்”.

“நமது நாட்டின் தேசிய கலாச்சார விழாவான இன்று நாம் நினைவில் வைக்க வேண்டியது இதுதான். நாடு வளம் பெற்ற செழிப்புடன் திகழ அனைவரும் ஒற்றுமையுடன் நெறியான ஒரே சிந்தனையோடு வாழ வேண்டும்” என சிறிசேனா தனது தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.