Home தொழில் நுட்பம் துருக்கியில் சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை! 

துருக்கியில் சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை! 

563
0
SHARE
Ad

turkeyஇஸ்தான்புல், ஏப்ரல் 7 – துருக்கியில் ‘டுவிட்டர்’ (Twitter), ‘யூ-டியூப்’ (You tube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே சமூக ஊடகங்களான டுவிட்டர், யூ-டியூப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றிற்கு அவ்வபோது தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இது போன்ற தடைகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் அந்நாட்டின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன். சமூக ஊடகங்கள் வாயிலாக அரசிற்கு எதிரான கருத்துகள் பகிரப்படுவதை எர்டோகன் விரும்பாததால், அவர் தனது ஆளுமையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களுக்கு பல்வேறு தடைகளை விதித்து வந்தார்.

இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு சமூக ஊடகங்களுக்கான தடைகளை நீக்கின. இந்நிலையில், துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகர நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மெஹ்மெட் சலிம் கிராஸ் என்பவரை கடந்த வாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.

#TamilSchoolmychoice

இந்த காட்சிகளை சில அமைப்புகள் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டன. இதன் காரணமாக இஸ்தான்புல் நீதிமன்றம், மேற்கண்ட புகைப்படங்களை வெளியிட்ட 166 இணையதளங்களை முடக்கியுள்ளது. மேலும், டுவிட்டர், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.