Home வணிகம்/தொழில் நுட்பம் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் உற்பத்தியை பெருக்க அரசு புதிய திட்டம்!

வளர்ச்சி குறைந்த பகுதிகளில் உற்பத்தியை பெருக்க அரசு புதிய திட்டம்!

614
0
SHARE
Ad

Datuk-Seri-Mustapa-Mohamedகோலாலம்பூர், ஏப்ரல் 7 – நாட்டில் வளர்ச்சி குறைந்து இருக்கும் பகுதிகளில் உற்பத்தி மற்றும் சேவைகளை பெருக்க அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி குறைந்த வளர்ச்சி உள்ள பகுதிகளில் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முதல் 15 வருடங்களுக்கு 100 சதவீத வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 – ம் ஆண்டு பட்ஜெட்டில் வளர்ச்சி குறைந்து இருக்கும் பகுதிகளில் வளர்ச்சியை பெருக்க சிறப்பான யோசனையாக கருத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் கூறுகையில், “பட்ஜெட்-2015 ன் படி வளர்ச்சி குறைந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 100 சதவீத வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“கடந்த 2006-2014-ம் ஆண்டு வரை நாட்டின் 5 பொருளாதாரப் பகுதிகளில் இருந்து 3,498 திட்டங்கள் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டங்களின் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடு முறையே 99.09 பில்லியன் ரிங்கெட்டுகள், 165.65 பில்லியன் ரிங்கெட்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதிகளில் 381,016 பேர் வேலைவாய்ப்புகளை பெற இருக்கின்றனர்.”

“தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வரிச்சலுகை அறிவிப்புகளால் வளர்ச்சி குறைந்த அந்தப் பகுதிகளில் முதலீடுகளை செய்திருக்கும் நிறுவனங்கள் பல்வேறு சாதகமான அம்சங்களை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.