இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் மகிச்சியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா இரண்டு இருசர்க்கர வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தன்னிடம், விலையுயர்ந்த பல இருசர்க்கர வாகனங்கள் இருந்தாலும், முதன் முதலாக, வாங்கிய வண்டியின் மீது தான், அவருக்கு பிரியம். அதனை அவ்வப்போது ஓட்டிப் பார்த்து மகிழ்வார் டோனி. அதற்கு முன்னர் ஆசையாக தனது சொந்த ஊரில் புல்லட் வண்டியில் வலம் வந்துள்ளார்.
ராஞ்சியில் அடையாள் எண் இல்லாமல் மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதன்படி கண்காணிக்கப்பட்டதில் டோனி ஓட்டிய புல்லட்டில் அடையாள் எண் இல்லை ஆகையால் நாங்கள் அவருக்கு அபராதம் விதித்து உள்ளோம்.
டோனி பதிவு செய்யபட்டாத மற்றும் அடையாள் எண் இல்லாத வாகனங்களை கண்காணிப்பதற்கு டோனி ஆதரவு தெரிவித்து உள்ளார். டோனி ராஞ்சி நகரில் போலீசாருக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது உள்ளார் என ராஞ்சி போலீசார் கூறி உள்ளனர்.