மாஸ்கோ, ஏப்ரல் 9 – ரஷ்யாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான ஆர்க்கான்கெலஸ்க் என்ற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
இதன் காரணமாக அந்த பகுதியில் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான அந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பலில் புணரமைக்கும் பணிகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்க்கான்கெலஸ்க் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. புணரமைக்கும் பணிகளின் போது, எதிர்பாராத விதமாக கப்பலின் போம் தீப்பிடித்து எரிந்தது. அதனைத் தொடர்ந்து தீ மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியது. உடனடியாக கப்பலில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அணுசக்தி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால், அணுக்கசிவுகள் எதுவும் நிகழ்ந்துள்ளனவா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.