Home உலகம் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- பான் கீ மூன் கோரிக்கை

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- பான் கீ மூன் கோரிக்கை

740
0
SHARE
Ad

pan-ki-mu இலங்கை, மார்ச்.4- இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் யதார்த்தமான நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான முக்கியத்துவத்தை இலங்கை முழுமையாக புரிந்து செயற்பட வேண்டும்.

எனவே யதார்த்தமானதும், முழுமையானதுமான தேசிய நல்லிணக்கன முனைப்புக்கள் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் ஊடாக, யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன குறித்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை அசராங்கம் சர்வதேச சமூகத்துடன் ஆரோக்கியமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.