சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாட்டின் முக்கிய பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டுக்குள் உள்ளது. இங்கு நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கால்பதிக்க திட்டமிட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். பலரை தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் திட்டமிட்டன.
அந்நாட்டு நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து போர் விமானங்களை சிரியாவுக்கு அனுப்பியுள்ளது கனடா. தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம்முள்ள சிரியாவின் ரக்கா பகுதியில் அமெரிக்க கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.