Home இந்தியா ஐபிஎல்-8: டெல்லி அணியை 1 ரன்னில் வீழ்த்தியது சென்னை அணி!

ஐபிஎல்-8: டெல்லி அணியை 1 ரன்னில் வீழ்த்தியது சென்னை அணி!

469
0
SHARE
Ad

csk-v-dd-ipl-2015சென்னை, ஏப்ரல் 10 – இந்தியன் ஐபிஎல் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

Albie-Morkel-in-CSK-vs-DD-Matchபின்னர் 151 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.