Home இந்தியா ஐபிஎல்: சென்னை 3 விக்கெட்டுகளில் வெற்றி! இறுதி ஆட்டத்தில் மும்பையோடு இனி பலப்பரிட்சை!

ஐபிஎல்: சென்னை 3 விக்கெட்டுகளில் வெற்றி! இறுதி ஆட்டத்தில் மும்பையோடு இனி பலப்பரிட்சை!

905
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniராஞ்சி, மே 23 – நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் அரை இறுதி ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் வெற்றி பெறும் அணிதான் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதும் என்பதால், நேற்றைய ஆட்டம் மிகுந்த பரபரப்புடனும், இந்தியா முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் ஓர் ஆட்டமாகவும் நடைபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீசியது. சென்னை அணியினர் அபாரமாகப் பந்து வீசியதில், 20 ஓவர்கள் முடிவடைந்தபோது பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. மொத்தம் 139 ஓட்டங்கள் மட்டுமே பெங்களூர் அணியினரால் எடுக்க முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடத் தொடங்கியது. ஆட்டம் முடிவை நெருங்கும்போது மிகவும் சில பந்துகளும் சில ஓட்டங்களும்தான் இருந்தன என்பதால், பதட்டம் ஆட்டக்காரர்களை மட்டுமின்றி, பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களையும் பற்றிக் கொண்டது.

#TamilSchoolmychoice

இறுதியில் மூன்று பந்துகளே மிஞ்சியிருக்க, ஒரே ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த பந்து பிடிக்கப்பட்டதில் ஆட்டம் இழந்தார்.

இருப்பினும் இறுதியில் அந்த ஒரு ஓட்டத்தையும் எடுத்து சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியோடு சென்னை அணி மோதும்.

Bangalore-Royal-Challengers-Logo