இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ”ஆந்திரா கடத்தல் தடுப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன்”.
“ஆந்திர அரசு உண்மை நிலையை அறிவதற்குத் தேவையான விசாரணையை நடத்திட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்”.
“இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேர் தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். அந்த 7 பேரின் குடும்பத்தினரையும் நேற்று, விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.50,000 நிதியுதவியை விஜயகாந்த் அளித்தார்