பாங்காக், ஏப்ரல் 10 – தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால், நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது.
இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர் வசதி செய்ய முடியவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. அதிலும் தாய்லாந்தில் வடக்கு பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
இங்கு வாரம் 2 முறை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது ஒரு முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் தாய்லாந்தில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது.
எனவே மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தேவைக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் 2 மாதங்கள் கழித்து தான் தாய்லாந்தில் மழை பெய்யும். அதற்குள் நிலைமை மிக மோசமாகிவிடும் என கணித்துள்ளனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.