Home இந்தியா ஐபிஎல்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர், கொல்கத்தாவை வெற்றி கொண்டது!

ஐபிஎல்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர், கொல்கத்தாவை வெற்றி கொண்டது!

622
0
SHARE
Ad

Bangalore Royal Challengers Logoகொல்கத்தா, ஏப்ரல் 12 – இந்த ஆண்டின் பெப்சி ஐபிஎல் போட்டிகளின் தொடரில் நேற்று  கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூர் ராயல் செலஞ்சர் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி வாகை சூடியது.

முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துகொண்டது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூர் அணியைச் சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் கிரிஸ் கேய்ல் தனது அபார ஆட்டத்தினால், 56 பந்துகளில் 96 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

#TamilSchoolmychoice