Home Featured இந்தியா ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் வென்றது!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் வென்றது!

722
0
SHARE
Ad

CRICKET-IPL FINALபெங்களூரு – ஞாயிற்றுக்கிழமை இரவு இங்குள்ள சின்னசுவாமி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் குழுவும் வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இதில்    ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில், பெங்களூர் அணியினர் பந்து வீச, ஹைதராபாத் அணியினர் விளையாடினர். இதில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, 208 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி பந்து வீச பெங்களூரு அணி விளையாடியது. முதல் ஆட்டக்காரர்களாக  வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கிரிஸ் கேய்ல் மற்றும் வீராட் கோலி இருவரும் களமிறங்கினர். இதில் கிரிஸ் கேய்ல் சதம் அடித்து அற்புதமாக விளையாடினார்.

ஆட்ட இறுதியில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 200 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி  8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த இறுதிப் போட்டியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோரும் கண்டு களித்தனர்.