Home படிக்க வேண்டும் 2 டிம் குக்கை வியப்பில் ஆழ்த்திய ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகள்!

டிம் குக்கை வியப்பில் ஆழ்த்திய ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகள்!

669
0
SHARE
Ad

Apple-Watchகோலாலம்பூர், ஏப்ரல் 12 –  ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு (பசிபிக் நேரம்) தொடங்கப்பட்டன. சரியான தருணத்தில் முன்பதிவினை தவறவிட்டவர்கள் குறைந்தபட்சம் மே மாதம் இறுதி வரை ஆப்பிள் வாட்ச்சின் வரவிற்காக காத்திருக்க வேண்டும். ஆம் சுமார் 6 மணி நேரத்தில் அனைத்து நாடுகளிலும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரையிலான முன்பதிவுகள் முடிந்துவிட்டன.

ஆப்பிள் வாட்ச், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் முதல் முறையாக களமிறக்கும் ஒரு புத்தம் புதிய தயாரிப்பு. அதன் காரணமாக அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அமெரிக்காவில் மட்டும் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இதனை வாங்க காத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

tim-cookஅவர்களின் இந்த எதிர்பார்ப்பே, முன் பதிவில் எதிரொலித்துள்ளது. இது பற்றி ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் ஆப்பிள் வாட்ச்சிற்கு அளித்துள்ள வரவேற்பு பிரமிப்பூட்டுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, லண்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முன் பதிவுகள் பற்றிய தகவல்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.”

#TamilSchoolmychoice

“முன்பதிவுகள் பற்றிய விவரங்கள் எனக்கு வியப்பளிக்கின்றன. மேலும், கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஆப்பிள் ஸ்டோருக்கு நான் சென்று இருந்த பொழுது மக்கள், ஆப்பிள் வாட்ச் பற்றி கூறிய கருத்துக்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.