Home உலகம் ஐநா பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் – மோடி அதிரடிப் பேச்சு!

ஐநா பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் – மோடி அதிரடிப் பேச்சு!

503
0
SHARE
Ad

modi1பாரீஸ், ஏப்ரல் 13 – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராவது இந்தியாவின் உரிமை. அதனை உலக நாடுகள் உணர வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ்வாழ் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “முதலாம் உலகப் போரில் இருந்தும், ஐநா அமைக்கப்பட்ட பின்னரும் இந்தியா உலகின் அமைதிக்காக பெரும் தியாகங்களை செய்து உள்ளது. உலகம் முழுவதும் இயங்கும் அமைதிப்படைக்கு இந்தியா, பெரும் பங்காற்றி உள்ளது. இப்போது, இந்தியா ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி கேட்டு நிற்கிறது.”

“இப்போது, இந்தியாவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்துகிறேன். இது மகாத்மா காந்தி மற்றும் கவுதம புத்தர் ஆகியோரது உணர்வுகளைக் கடைபிடிக்கும் தேசத்தின் உரிமையாகும். இந்தியா கெஞ்சிய நாட்கள் எல்லாம் போய்விட்டன. தற்போது எங்களுடைய தேசம், தனது உரிமையைதான் கோருகிறது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “ஐநா பாதுகாப்பு ஆணையம் தனது 70-வது ஆண்டு தினத்தை கொண்டாடும் போது இந்தியாவின் தியாகங்களை நினைத்துப் பார்க்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா, நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதாரவு தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸில் இது தொடர்பாக மோடி ஆற்றிய உரை அதற்கு மேலும் வலு சேர்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.