Home இந்தியா நேதாஜி குடும்பத்தார் பற்றி நேரு அரசு, பிரிட்டிஷ் அரசுக்கு தகவல் அனுப்பியது!

நேதாஜி குடும்பத்தார் பற்றி நேரு அரசு, பிரிட்டிஷ் அரசுக்கு தகவல் அனுப்பியது!

482
0
SHARE
Ad

netajiபுதுடெல்லி, ஏப்ரல் 13 – நேரு பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்திய உளவுத்துறை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தாரை உளவு பார்த்து, பிரிட்டிஷ் அரசுக்கு அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது என்ற பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அண்மையில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்-அவ்’ (India’s biggest cover up) என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் தேசிய ஆவண காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 2 முக்கிய கோப்புகள் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தன.

இதுபற்றி அனுஜ்தர் கூறும்போது, “மிக இரகசியமான இந்த கோப்புகள் இரண்டும் தவறுதலாக தேசிய ஆவண காப்பகத்துக்கு வந்துவிட்டன. இந்த கோப்புகள் முக்கிய தகவல்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றில் ஒவ்வொரு சிறு விஷயமும் உன்னிப்பாக கவனித்து எழுதப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த தகவல்களின் படி நேதாஜியின் சகோதரர் மகன்கள் சிசிர்குமார் போஸ், அமியாநாத் போஸ் மற்றும் அவருடைய ஜெர்மன் நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரை உளவு பார்க்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் உளவுத்துறையின் வலையிலும் இருந்துள்ளனர். அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணம், கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் ஆகியவற்றை இந்திய உளவுத்துறை வேவு பார்த்துள்ளது. மேலும், அந்த தகவல்கள் பிரிட்டிஷ் உளவுத்துறையான MI5-வுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நேதாஜியின் நெருங்கிய உதவியாளர் ஏ.சி.என். நம்பியார் கொல்கத்தாவில் இருந்த அமியாநாத் போசுக்கு, எழுதிய அனைத்தும் நகல் எடுக்கப்பட்டு பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏ.சி.என். நம்பியார் தனிப்பட்ட முறையில் உளவு பார்க்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை சோவியத் உளவாளி என்று நம்பியது. அதன் காரணமாகவே அவரின் கடிதங்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளன.

இது குறித்து அனுஜ் தர் கூறுகையில், “இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னரும் பிரிட்டிஷ் உளவுத்துறை செயல்பட அனுமதி அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.