Home அவசியம் படிக்க வேண்டியவை மும்பை டப்பாவாலாக்களுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட்!

மும்பை டப்பாவாலாக்களுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட்!

505
0
SHARE
Ad

dappaபுது டெல்லி, ஏப்ரல் 14 – மும்பை டப்பாவாலாக்களுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பிளிப்கார்ட் நிறுவனம், உணவு சேவையிலும் இறங்க இருக்கிறதா என்று எண்ணத் தோன்றும். ஆனால், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான பொருட்களின் விநியோக முறையை மாற்ற இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக வளர்ந்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பயனர்களுக்கான பொருட்களின் விநியோகத்தை மும்பை டப்பாவாலாக்கள் வசம் ஒப்படைக்க இருக்கின்றது.

கடந்த 10 வருடங்களாக வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயங்கி வரும் டப்பாவாலாக்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவுப் பொட்டலங்களை வாங்கி, அவர்கள் கூறும் அலுவலகங்களிலோ, பள்ளியிலோ சேர்த்துவிடுவர். இவர்கள், மும்பையில் மட்டும் நாள் ஒன்றிற்கு 200,000 சாப்பாட்டு பொட்டலங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அதிகமான உணவு டப்பாக்கள் இருந்தாலும், இந்த டப்பாவாலாக்கள், சில குறி முறைகள் மூலம், சரியான நபருக்கு சரியான நேரத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்கி விடுகின்றனர். இவர்களின் இந்த குறி முறைகளை, ஹார்வர்ட் பல்கலைக்கழகமே பாராட்டி உள்ளது. அவர்கள் ஆறு மில்லியன் விநியோகங்களில் ஒருமுறை மட்டுமே தவறு செய்வதாகக் கூறப்படுகிறது.

இவர்களின் இந்த சேவையை பிளிப்கார்ட் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனர் நீரஜ் அகர்வால் கூறுகையில், “மும்பை டப்பாவாலாக்களின் சேவை நம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளது. அவர்களின் குறி முறை எளிமையானதாகவும், நம்பும்படியாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

தற்சமயம், முன்பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும், பொருட்களை இவர்கள் மூலமாக விநியோகம் செய்ய முடிவு செய்துள்ள பிளிப்கார்ட், எதிர்காலத்தில் முழுசேவைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.