Home உலகம் லிபியா அருகே படகு கவிழ்ந்து 400 பேர் நீரில் மூழ்கி பலி!

லிபியா அருகே படகு கவிழ்ந்து 400 பேர் நீரில் மூழ்கி பலி!

608
0
SHARE
Ad

Italian navy rescue asylum seekersரோம், ஏப்ரல் 15 – லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து கள்ளத் தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இவ்விபத்தை அடுத்து இத்தாலி கப்பல் படையை சேர்ந்த வீரர்கள் சுமார் 140 பேர்களை மட்டும் உயிருடன் மீட்டனர். பலியானவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

??????????????விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமானோர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுபோல் விபத்து நடப்பது இது முதல் முறை இல்லை.

ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.