Home உலகம் 400 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா!

400 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா!

791
0
SHARE
Ad

brahmos6-600பீஜிங், ஏப்ரல் 17 – திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் சீன ராணுவம் வான் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த, ரஷ்யாவிடமிருந்து அதி நவீன எஸ்-400 வான் பாதுகாப்பு கருவிகளை சீனா வாங்குகிறது.

இதில் பயன்படுத்தப்படும் 40-என்-6 ஏவுகணை தரையிலிருந்து, விண்ணுக்கு விநாடிக்கு 4.8 கி.மீ வேகத்தில் 400 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தகர்க்க முடியும்.

இந்த எஸ்-400 வான் பாதுகாப்பு கருவிகள் மூலம் 3-விதமான ஏவுகணைகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்க முடியும். இதன் மூலம் 3 அடுக்கு வான் பாதுகாப்பை சீன ராணுவத்தால் ஏற்படுத்த முடியும்.

#TamilSchoolmychoice

1428943723472இது குறித்து ரஷ்யாவின் ‘ரோசோபரோன் எக்போர்ட்’ என்ற ஆயுத நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனாடோலி இசாகின் கூறுகையில், ‘‘ரஷ்யாவிடமிருந்து இத்தகைய நவீன வான் பாதுகாப்பு கருவிகளை வாங்கும் முதல் நாடு சீனா’’ என குறிப்பிட்டுள்ளார்.

சீன ராணுவத்தில் 6-எஸ்-400 பட்டாலியன்களை உருவாக்குவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில், இந்த வான் பாதுகாப்பு கருவிகளை ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்குகிறது.